• Oct 26 2024

வேட்டையன் கதையும் மாஸ்.. படமும் மாஸ்..! 3 நாட்களில் குவிந்த கோடிகளின் கலெக்சன்?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படம் அவருடைய 170 ஆவது படமாக காணப்படுகிறது. இதில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ரித்திகாசிங், மஞ்சு வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த படம் பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது. நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படுவரின் குரலை எதார்த்தமாக காட்டியுள்ளார் இயக்குனர் .

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வேட்டையன்  திரைப்படம் வெளியானது. இதில் இடம் பெற்ற மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது. சுமார் 900 தியேட்டர்களுக்கு மேல் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.


இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் மூன்றாவது நாளில் இந்தியாவில் மட்டுமே 25 கோடிகளில் இருந்து 30 கோடி வரை வசூலித்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் இரண்டு நாட்களில் 60 கோடிகளை வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த படம் 90 கோடிகள் முதல் 95 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் எனவும் கூறப்படுகின்றது. எனினும் வேட்டையன் படத்தின் வசூல் பற்றிய அதிகாரபூர்வ  தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement