• Oct 27 2024

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் ஒன்றிணைந்த வெற்றிக் கொண்டாட்டம்! வைரல் வீடியோ

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் குறுகிய நாட்களுக்குள் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கி உள்ளது.

புதுமுக நடிகர்களோடு ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் மூன்று இளம் ஜோடிகள் இந்த சீரியலை விறுவிறுப்பாக நகர்த்தி  வருகிறது. அதிலும் முத்து மீனாவுடைய கேரக்டருக்கு அடுத்ததாக ரோகிணி - மனேஜ் கேரக்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த சீரியலில் மனோஜ் - ரோகினி கேரக்டர்கள் சற்று வித்தியாசமானதாகவும் பிறரை ஏமாற்றி தாம்பிழைத்துக் கொள்ளும் வழியை தேடுவதாகவும் காணப்படுகிறது. ஆனாலும் இவர்கள் மூலம்தான் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் ஆரம்பிக்கப்பட்டு 500 எபிசோட்களை கடந்த நிலையில் அதனை வெற்றி கொண்டாட்டமாக கொண்டாடி உள்ளார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

Advertisement