சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாகத் திரைக்கு வரவிருக்கும் படம் வேட்டையன். இந்நிலையில் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வேட்டையன் படத்தின் நடிகர் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா எனப் பலரும் முக்கிய கதாபாத்திரத்திலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தான் கூலி.
ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் போலவே வேடமிட்டு அதனை வீடியோ எடுத்து வெளியிடுவார்கள். அதுபோலவே ஜெயிலர் படத்தில் வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை போலவே ரசிகர் ஒருவர் வேடமிட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. ரஜினியை போல் வேடமிட்டு இருந்தது மட்டுமல்லாமல் அவரைப் போலவே ஸ்டைலாகவும் சில விஷயங்களைச் செய்து அசத்தியுள்ளார்.
யாரு சாமி நீ 😁 pic.twitter.com/QemlFCgdIa
— ᴋᴏʟʟʏᴡᴏᴏᴅ ᴛᴀʟᴋs (@kollywoodtalks) August 18, 2024
Listen News!