• Dec 26 2024

ஹவுஸ்மேட்ஸை தடுமாறச் செய்த டாஸ்க்! கதறியழுத விசித்ராவை கட்டியணைத்த போட்டியாளர்கள்! பிக்பாஸ் வீட்டில் நெகிழ்ச்சி சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ஒன்றில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க...

ஏற்கனவே, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று கடுமையான போட்டி வைக்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் உங்கள் வாழ்க்கையின் பூகம்பம் என்ற ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது.

இதில் தங்களுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற துயர சம்பவங்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

அதன்படி, மாயா மற்றும் தினேஷ் என அனைவரும் வரிசையாக சொல்ல விசித்திராவும் தனது கதையை சொல்லி உள்ளார். இதை கேட்டு அனைவரும் அழுவது போல காட்டப்படுகிறது. எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். அவர் என்ன துயர சம்பவத்தை பகிர்ந்துள்ளார் என...


Advertisement

Advertisement