• Jul 27 2025

ரிலீஸுக்கு ரெடியான G.V பிரகாஷின் ‘அடங்காதே’.! வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக கமெர்ஷியல் மற்றும் எமோஷனல் கலவையுடன் உருவாகும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்தவகையில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள படம் தான் ‘அடங்காதே’. இப்படம் ஆகஸ்ட் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இப்படத்தை இயக்கியுள்ளவர் சண்முகம் முத்துசாமி. இதில், முக்கிய கதாபாத்திரங்களில் ஜி.வி. பிரகாஷ், சரத்குமார், சுரபி உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான டீசர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இசைமைப்பாளராக தான் திரையுலகில் பயணத்தை தொடங்கிய ஜி.வி. பிரகாஷ், தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகராக உயர்ந்துள்ளார். ‘அடங்காதே’ படத்தில் அவர் முன்பு நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் வருகிறார்.


இப்படம் ஆகஸ்ட் 27, 2025 அன்று தமிழ் மற்றும் பிற மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ஒரு சிறப்பு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement