• Apr 23 2026

'துரந்தர்: The Revenge" திரைப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! என்ன தெரியுமா

shali / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் படங்களுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வகையில் பெரும் கவனத்தை பெற்ற திரைப்படமாக 'துரந்தர்' திகழ்கிறது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக “துரந்தர்: The Revenge” உருவாகி வருகிறது. முதல் பாகம் பெற்ற வெற்றியின் காரணமாக இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவர்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் மாதவன், அக்‌ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல்வேறு திறமையான நடிகர்கள் இணைந்து நடித்திருப்பதால் இந்த படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி “துரந்தர்: The Revenge” திரைப்படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழு வெளியிட்ட இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ரன்வீர் சிங் ரசிகர்கள் டிரெய்லரை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். டிரெய்லர் வெளியானவுடன் படத்தின் கதை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் குறித்து மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் Jio Studios மற்றும் B62 Studios இணைந்து இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளன.


போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக ரன்வீர் சிங் அதிரடி தோற்றத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சமாக நடிகர் ரன்வீர் சிங் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஜஸ்கிரத் சிங் ரங்கி மற்றும் ஹம்ஸா என்ற இரண்டு வேறு வேறு கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். 

Advertisement

Advertisement