• Dec 26 2024

பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாழை படத்தின் டிரைலர்!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வடிவேலு, உதயநிதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் வடிவேலு, உதயநிதியை விட பகத் பாசிலின் நடிப்பு வேற லெவலில் வைரல் ஆனது.

இந்த படத்தை இயக்கியவர் தான் மாரி செல்வராஜ். தற்போது மாமன்னன் படத்திற்கு அடுத்ததாக வாழை என்கின்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அது மட்டுமின்றி இந்த படம் ஹாட் ஸ்டாரில் நேரடியாகவே வெளியாக உள்ளது.

சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் பட புகழ் பிரியங்கா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.


வாழைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவிலேயே காணப்படுகின்றது.

இந்த நிலையில், வாழை திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement