• Dec 27 2024

குக் வித் கோமாளி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்... முதலாவது படமே நயன் கூடவா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த சமையல் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற காரணத்தினால் தற்போது இதன் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

குக் வித் கோமாளி சீசன் 5வது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்ட போதும் இறுதியில் புதிய நடுவர்கள், புதிய போட்டியாளர்கள், கோமாளிகள் என புதிதாக களமிறக்கினார்கள். இதன் காரணத்தினால் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து வருகின்றார்கள்.

அதிலும் இந்த சீசனில் பங்குபற்றிய ஷாலினி ஜோயாவுக்கு மிகப்பெரிய பேன்ஸ் உருவானார்கள். அதேபோல இர்பான், பூஜா, பிரியங்கா, விஷாலி கெம்கர் போன்ற பலர் இம்முறை கலக்கி வருகிறார்கள். ஆனாலும் சிலர் எலிமினேட் ஆகி வெளியேறியும் உள்ளனர்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ல் பங்கு பற்றிய விஷாலி கெம்கருக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாம். தற்போது இந்த தகவல் வெளியாகி வைரலாகி உள்ளதோடு, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


அதிலும் தற்போது நயன்தாரா நடித்துவரும் புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு விஷாலி கெம்கருக்கு கிடைத்துள்ளதாம். அந்த படத்தில் கவினும் நடிக்க உள்ளாராம். 

இவ்வாறு தனது முதலாவது படமே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர் படு மகிழ்ச்சியில் உள்ளாராம்.

Advertisement

Advertisement