• Oct 31 2024

8 வருட தவத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.. அம்மாவான சீரியல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

2013 ஆம் ஆண்டு கன்னட சீரியல் ஆன 'லட்சுமி பாரம்மா' என்ற சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் தான் நடிகை நேஹா ராமகிருஷ்ணன். இந்த சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன் பின்பு சுவாதி சினுகுலு  என்ற தெலுங்கு சீரியல் நடித்தார் இதிலும் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து கல்யாண பரிசு, ரோஜா, பாவம் கணேசன் போன்ற தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதனால் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதன்பின் நந்தன் என்பவரை காதலித்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் 2017 ஆம் ஆண்டு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நேகா ராம கிருஷ்ணன் அம்மாவாக போகும் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டு இருந்தார். அதன் பின்பு கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படத்தையும் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.


நேஹா ராமகிருஷ்ணனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வளைகாப்பும் நடைபெற்றது. இதில் சின்னத்திரை நடிகர் கலந்து கொண்டார்கள் இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதள பக்கங்களில் வைரலானது.

இந்த நிலையில், நடிகை நேஹா ராமகிருஷ்ணனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அப்பா, அம்மா ஆகி உள்ள இவர்களுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement