• May 22 2026

முடிந்தது இழுபறி... கைகொடுத்த கூட்டணிக் கட்சிகள்! தமிழக அரசியலில் புதிய சரித்திரம் ஆரம்பம்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளவர் விஜய். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த அவர், தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 


தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழகத்தின் இரு பெரிய திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும், 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு விகிதத்தைப் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஆட்சியை அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக தவெக மற்ற கட்சிகளின் ஆதரவை பெற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. ஆரம்பத்தில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்முன் ஆதரவு கடிதங்களை வழங்க வேண்டும் என ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், காங்கிரஸைத் தொடர்ந்து சி.பி.ஐ ,சி.பி.எம் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததன் மூலம் தவெக 119 எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மையை எட்டியுள்ளது. 

இதையடுத்து, பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து தற்பொழுது விஜய் புறப்பட்டு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரிக்கை விடுக்க கிளம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement