வெற்றி மேடையில் பதக்கம் வாங்கும் வீரர்களை மட்டுமே உலகம் பார்க்கிறது. ஆனால் அந்த ஒரு பதக்கத்துக்காக அவர்கள் கடந்து வரும் வலி, அவமானம் மற்றும் போராட்டங்களை எத்தனை பேர் அறிவார்கள்? அந்த மறைக்கப்பட்ட உண்மைகளை திரையில் பேச வருகிற திரைப்படம்தான் அங்கீகாரம்.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அறம், அயலான் போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அவருடன் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.
வருகிற ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள அங்கீகாரம் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அங்கீகாரம் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கீகாரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாக உள்ளது.
விளையாட்டு வீரர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார போராட்டங்களையும் உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் இந்தப் படம், ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட கதைக்களம், ‘அங்கீகாரம்’ திரைப்படத்தை மற்ற படங்களிலிருந்து வேறுபடுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Angikaaram - Second Single Sports Celebration Anthem releasing Tomorrow At 11:03 AM..✌️ pic.twitter.com/SxYG3OZwH8
Listen News!