• May 23 2026

தமிழகத்தின் புதிய தலைவர் விஜய் தான்! பகிரங்கமாக அறிவித்த சிபி சத்யராஜ்.. வைரலாகும் பதிவு

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களை கைப்பற்றி அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் எண்ணிக்கையை த.வெ.க. இன்னும் எட்டவில்லை. இதனால் அரசியல் கூட்டணிகள் மற்றும் பின்னணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை மனு வழங்கினார். ஆனால், பெரும்பான்மை ஆதரவு உறுதி செய்யப்படாததால் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற அரசியல் தகவல்களும் பரவி வருகின்றன.

இந்த அரசியல் பரபரப்பின் நடுவில் நடிகர் சிபி சத்யராஜின் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. “தமிழக மக்கள் தங்களுக்கு வேண்டிய தலைவரை தேர்ந்தெடுத்து விட்டார்கள். மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்” என்ற அவரது கருத்து பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும், அரசியல் ஆதரவாளர்களும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement