• Jan 07 2025

அடுத்தடுத்து மனோஜுக்கு நேர்ந்த சரிவு.! சந்தோஷ் சார் கொடுத்த வார்னிங்.? சிக்கலில் ரோகிணி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜின் ஷோரூம்க்கு மொத்த குடும்பமும் வருகின்றது. அங்கு செல்வம் மாலையுடன் வருகின்றார். இதன்போது அண்ணாமலைக்கும் விஜயாவுக்கு மாலை போட்டு அண்ணாமலையை முதலாளி கதிரையில் உட்கார வைக்கின்றார் முத்து.

இதனால் மனோஜ் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியே கிளம்ப, அந்த நேரத்தில் சந்தோஷ் சார் வருகின்றார். மேலும் எல்லோரும் இங்கே இருக்கிறீர்கள் என்ன விசேஷம் என்று கேட்கின்றார். அதற்கு அண்ணாமலை சமாளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மனோஜிடம் சாமான் வாங்க காசு கொடுத்தவர்கள் வந்து தகராறு பண்ணுகிறார்கள்.

d_i_a

இதன்போது மனோஜ் மீது எந்த தப்பும் இல்லை. ஜப்பானிலிருந்து சாமான் வர கொஞ்சம் லேட்டாகி விட்டது. இன்னும் ரெண்டு நாளில் உங்களுடைய சாமான் கைக்கு கிடைக்கும் என்று அவர்களை சமாதானம் செய்து அனுப்புகின்றார் சந்தோஷ் சார். அதன் பிறகு ரோகிணியிடம் பணத்தை அக்கவுண்டில் போட்டாச்சா? மனோஜ் என்ன செய்கின்றீர்கள் என சரமாரியாக  திட்டுகின்றார்.

இதனால் அண்ணாமலை உண்மையைச் சொல்ல, முத்து அதனை சொல்லி முடிக்கின்றார். இதன் போது கோபப்பட்ட சந்தோஷ் வேற யாரும் என்றால் பார்ட்னர்ஷிப்பை இப்போதே முறித்து விட்டு சென்றிருப்பார்கள். ஆனால் உனக்காக உனது குடும்பம் எப்போதும் துணை நிற்கின்றது. அதற்காக மட்டும் தான் மன்னிக்கின்றேன் என்று மனோஜ்க்கு வார்னிங் கொடுத்து செல்கின்றார்.


வீட்டுக்கு வந்த விஜயா மனோஜை முத்து அசிங்கப்படுத்துவதாக பேசுகின்றார். அதன் பின்பு இது எல்லாம் உன்னால தான் என்று ரோகிணிக்கு திட்டி விட்டு கூடிய சீக்கிரமே காச செட்டில் பண்ண பாருங்க.. இனி என்ன கேட்காமல் எந்த ஒரு விஷயத்தையும் நீ செய்யக்கூடாது என்று ரோகிணிக்கு சொல்லி செல்கின்றார்.

அதன் பின்பு மீனா உனக்கு பார்ட்னர் கிடைச்சாச்சு என்று முத்து சந்தோஷப்படுகிறார். என்ன விஷயம் என்று கேட்க, அம்மா ரோகிணிக்கு திட்டுகின்றார். ஆனால் ஸ்ருதிக்கு இப்படி திட்ட முடியாது. அதற்காகத்தான் சொன்னேன் என்று சொல்ல, இதனை விஜயாவும் ரோகிணியும் தனித்தனி ரூமில் இருந்து  கேட்டுக்கொண்டு உள்ளார்கள்.

இறுதியாக மனோஜை ஏமாற்றியவரிடம் இருந்து பணத்தை மீட்பதற்கு நீ பூ கொடுப்பது போல அந்த  நபரின் வீட்டுக்குச் சென்று சகஜமாக பழகுமாறு மீனாவுக்கு சொல்லுகின்றார். அதேபோல ரோகிணியும் வீட்டிலேயும் அசிங்கப்பட்டாச்சு ஷோரூமில் அசிங்கப்பட்டாச்சு இது மாறனும்னா காச நாம திருப்பி வாங்கணும் என்று பிளான் போடுகின்றார்.

Advertisement

Advertisement