• Apr 23 2026

மொத்த வீடும் உங்களுடையது..! தினேஷ்க்கு கொடுக்கப்பட்ட அதிரடி அதிகாரங்கள்! திடீரென மாறிய பிக்பாஸ் விதிமுறைகள்! இப்பவே தலை கவிழ்ந்த மாயா டீம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


மேலும், நேற்றைய தினம் அடுத்த வாரத்திற்கான ஹாப்டன்சி யார் என்பது தொடர்பில் டாஸ்க் வைக்கப்பட்டு அதில் தினேஷ் வெற்றி பெற்றார். இதுவே அவருக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இனி பிரிவுகள் இல்லை. மொத்த வீடும் உங்களுடையது தான் என பிக் பாஸ் தலைவர் அறிவித்துள்ளார். 

அதன்படி, எல்லாருக்கும் ஒரே வீடு, எங்கையும் இருக்கலாம் எப்படியும் இருக்கலாம் என முழு அதிகாரத்தையும் கொடுத்துள்ளார்.

இதை கேட்டு அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க, மாயா பூர்ணிமா மட்டும் தலையை கவிழ்த்து சோகத்தில் இருக்கின்றனர்.எனவே இனி பொறுத்திருந்து பார்ப்போம் தினேஷின் ஆட்டத்தை....


Advertisement

Advertisement