• Dec 26 2024

கங்குவா பார்த்து ஸ்பீக்கர் அவுட்டான பெண்கள்.. இணையத்தில் படு வைரலான சம்பவம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். மேலும் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர்களான திஷா பதாணி, பாபி தியோல் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

d_i_a

முதல் நாளில் 58 கோடிகளை வசூலித்த கங்குவா திரைப்படம், இரண்டாவது நாளில் மொத்தமாக 20 கோடிகள் வரை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தியன் 2, தேவரா, ஆதிபுருஸ் படங்களை தொடர்ந்து கங்குவா  திரைப்படமும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. படத்தை பார்த்த ரசிகர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகள் திட்டுவதும் கிண்டல் செய்வதும் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.


இவ்வாறான நிலையில் பெண்கள் கூட கங்குவா படத்தை கிண்டல் செய்து ரிலீஸ் வெளியிட்டுள்ள காட்சிகள் வைரலாகியுள்ளன. அதன்படி காதில் பஞ்சை வைத்துக்கொண்டு வயதான பெண் ஒருவரும் இளம் பெண் ஒருவரும் சேர்ந்து செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்து சூர்யா ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

கங்குவா படத்தில் அதிக சத்தம் இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் கூட இந்த படத்தை பார்க்க லோடு லோடா பஞ்சு கொண்டு போகணும் என்று கிண்டல் செய்திருந்தார். 

தற்போது அவரைப் போலவே குறித்த பெண்களும் காதில் பஞ்சை வைத்துக்கொண்டு கங்குவா படத்தை நெருப்பு என்று பார்க்கப் போனால் கடைசில வெறுப்பாகித்தான் வந்தோம் என்று வெளியிட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement