• Dec 26 2024

நல்ல தண்ணீர் குடுங்க என்று கேட்கிறாங்க,- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பிக்பாஸ் சீசன் 7 பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாவே பெய்து வரும் கனமழையினால், மக்கள் பலரும் பாதிக்கப்பட்டு அவஸ்தைப் பட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பல மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகின்றது. அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு காமெடி நடிகர் பாலா, அறந்தாங்கி நிஷா மற்றும் பல நடிகர்கள் நேரில் சென்று உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.


இந்த நிலையில் பட்டிமன்றப் பேச்சாளரும் பிக்பாஸ் சீசன் 7 இல் வைல்ட்காட் என்ட்ரியாக வந்த அன்ன பாரதியும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

அதில் அவர் எல்லோரும் நல்ல தண்ணீர் கொடுங்க என்று தான் கேட்கிறாங்க, இவங்களப் பார்க்க ரொம்ப பாவமாக இருக்கு என்றும் தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பணிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement