• Dec 26 2024

அப்பாஸுக்கு ஜோடியா நடிக்கணும்னு ஒன்பது லட்சம் வாங்கி ஏமாத்திட்டாங்க! என் கைலயே அந்த உயிர் போச்சு! நடிகை தீபா எமோஷனல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல், குக் வித் கோமாளி மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் நடிகை தீபா. இவரின் இயற்கையான நகைச்சுவை மற்றும் பேச்சுகளுக்கு என்றே தனி ரசிகர் வட்டாரம் உண்டு. இவர் தற்போது சின்னத்திரையில் மட்டும் இன்றி வெள்ளித் திரையிலும் கால் பதித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகை தீபா ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சிலரிடம் பணம் கொடுத்து ஏமாந்தது குறித்தும்,  தன் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த தன்னுடைய அம்மா குறித்து உருக்கமாக தீபா பேசி இருக்கிறார்


அதன்படி அவர் கூறுகையில், 'நான் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களிலும் நடித்திருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் வெளியே தெரியவில்லை. இப்போது ஒரு சில வருடங்களாகவே எல்லோரும் என்னை தீபா அக்கா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் ஒரு சில திரைப்படங்கள்தான். நான் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் அப்போது அந்த திரைப்படத்தில் என்னுடைய நடிப்பு பெரியதாக பேசப்படவில்லை. ஆனால் இப்போது பலரும் என்னிடம் கேட்கிறார்கள் நீங்க தானே மாயாண்டி குடும்பத்தினர் படத்தில் நடித்தவர்கள் என்று, இந்த அளவிற்கு எனக்கு வெளியே பெயர் வருவதற்கு காரணம் கடைசி விவசாயி திரைப்படம் தான் என்று திரைப்படத்தின் மூலமாகத்தான் நான் யார் என்பதே பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. அதுபோல் அடுத்த கட்டத்திற்கு என்னை கொண்டு சேர்த்தது டாக்டர் திரைப்படம் தான். 


அதுபோல என்னுடைய அம்மா தான் நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்ட நபர். அவர் உயிரோடு இருக்கிற வரைக்கும் நான் நல்லா வர வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டார். என் கைய புடிச்சிட்டு தான் எங்க அம்மாவோட உயிர் போச்சு. இப்பவும் நான் சொல்றேன் நான் இந்த அளவுக்கு பெயரும் புகழோடு இருப்பதற்கு இறந்து எங்க அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணிக்கிட்டு இருக்கிறதுனால தான் என்று அந்த பேட்டியில் தீபா பேசி இருக்கிறார். 


மேலும், நான் ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் போது ஒரு சிலரிடம் நடிக்க வேண்டும் என்று ஏமாந்து இருக்கிறேன். அப்போது ஒருத்தன் என்னிடம் நீங்க அப்பாஸுக்கு ஜோடியா நடிக்கணும் அதனால 9 லட்சம் ரூபாய் வேணும் என்று ஏமாற்றி இருந்தான், இது போல யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக தான் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து வருகிறேன். அதுபோல ஒரு முறை எனக்கு ஒரு சில உதவிகளை செய்த நபர் ஒருவர் என்னிடம் ஒரு விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். நானும் சரி நமக்காக எத்தனையோ உதவி செய்திருக்கிறாரே அவருக்கு எப்படி நாம மறுப்பு சொல்ல முடியும் என்று சொல்லி சரி என்று சொல்லி விட்டேன். 


பிறகு அங்கு போன பிறகு நடிக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்று ஒரு விளம்பரம் இருக்கிறது. அந்த விளம்பரத்தில் என்னை நடிக்க சொல்லி இருந்தார்கள் எனக்கு ரொம்பவே கஷ்டமாகி விட்டது. அதற்கு பிறகு தான் இந்த மாதிரி ஏமாற்றில் எல்லாம் நாம கலந்து கொள்ள கூடாது என்று முடிவெடுத்தேன். அப்போதும் கூட அங்கு வாய்ப்புக்காக வந்தவர்களிடம் எல்லாம் இப்படி எல்லாம் ஏமாறாதீங்க என்று நான் அட்வைஸ் கொடுத்தேன். இப்போது நான் எந்த விளம்பரங்களில் நடிக்கிறதா இருந்தாலும் நேரடியாக நடிப்பது கிடையாது. அதற்கு என்று ஒரு தம்பி இருக்கான். அவன் கிட்டயே எல்லாரும் பேசிக்கங்கன்னு சொல்லுவேன். அவன் எல்லாத்தையும் தெளிவா விசாரிச்சிட்டு தான் என்கிட்ட சொல்லுவான் என்று அந்த பேட்டியில் தீபா பேசி இருக்கிறார். 

Advertisement

Advertisement