• Dec 26 2024

கல்யாணத்திற்கு முன்னாடியே ஹனிமூனுக்கு வந்திருக்கிறாங்க- ரவீனாவையும் மணியையும் கழுவி ஊற்றிய வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 75 நாட்களைக் கடந்துள்ளது.பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்றுதான் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு தான் நிகழ்ச்சியானது சூடு பிடிக்க ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது.

மேலும் கடந்த வாரம் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறியிருந்தனர். இது ஒருபுறம் இருக்க யார் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமாரும் விமர்சனம் கொடுத்து வருகின்றார்.


அந்த வகையில் தற்பொழுது கூறியதாவது, பிக் பாஸ் சீசன் 3ல எனக்கு கவின் மற்றும் சாண்டி இரண்டு பேரும் வத்திக்குச்சி என்று பெயர் வைத்தார்கள். அப்போது கமல்ஹாசனே இரண்டு முறை சொல்லுங்க வத்திக்குச்சி என்று சொல்லி இருக்கிறார். ஆனால், இந்த சீசன்ல மட்டும் பட்டப்பெயர் வைக்கக்கூடாது என்று சொல்வது ரொம்ப தப்பு என்று சொல்கிறாரே அது ஏன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து பார்த்தா ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து இருக்கிறார்கள். சோ இதெல்லாம் சாதாரண விஷயம். இதை கமல் பெரிய விஷயமா பேசுவதைப் பார்க்கும் போது என்னடானு நினைக்கத் தோன்றுகிறது. ட்விட்டரில் போனாலே அவரை கழுவி ஊத்துறாங்க. நேற்று தெலுங்கு பிக் பாஸ் பைனல் முடிஞ்சது, அவ்வளவு சூப்பராக நாகார்ஜூன் அந்த நிகழ்ச்சியை கொண்டு போய் இருந்தார். ஆனால், இங்கு ஒரே ஆண்டவர் புராணமாக இருக்கிறது. 


 பிக் பாஸ் வீட்டில் விக்ரம் அவரை எத்தனை பேர் கடுமையாக திட்டினாலும், கேலி கிண்டல் செய்தாலும்,பிக் பாஸ் டைட்டிலை பெற விடாமுயற்சியுடன் போராடி வருகிறார். ஆனால், அதே வீட்டில் இருக்கும் ரவீனா மற்றும் மணிக்கு இது பெய்ட்டு ஹனிமூன் போல, ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்னாடி இது யாருக்கு கிடைக்கும் என்று நடிகை வனிதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement