• Sep 17 2026

ரொம்ப பழைய ஆர்டிஸ்ட்’னு சொல்லி நிராகரிச்சுட்டாங்க.. கண்ணீர் மல்க பேசிய வையாபுரி.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

வையாபுரியின் உருக்கமான பேச்சு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் வையாபுரி, தனக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒரு பெரிய தயாரிப்பு மேலாளர் என்னை ஒரு இயக்குனரிடம் அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு சென்றபோது அந்த இயக்குனர் என்னை பார்க்கவே மறுத்துவிட்டார். ‘அவர் ரொம்ப பழைய ஆர்டிஸ்ட்... நான் இல்லை என்று சொல்லிவிடுங்கள்’ என்று கூறியிருக்கிறார்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


இந்த வார்த்தைகளை கேட்டதும் தான் மிகவும் உடைந்துவிட்டதாக கூறிய வையாபுரி, இன்றைய காலகட்டத்தில் உள்ள சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தான் உணர்ந்ததால், அதற்காகவே இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்னை ஃபாலோ செய்கிறார்கள். எனக்கு இது போதும்..” என அவர் கண்ணீர் விட்டு பேசியுள்ளார். சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து வரும் ஒரு நடிகர், வாய்ப்புக்காக இவ்வாறு வேதனைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வையாபுரியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement