தென்னிந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ஸ்டைலிஷ் மற்றும் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருவது ரசிகர்களுக்கு புதுசல்ல.

இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்துள்ள ‘Made in Korea’ திரைப்படத்தின் ஹீரோவுடன் எடுத்துக்கொண்ட சில புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றன.
புகைப்படங்களில் பிரியங்கா மோகன் மிக எளிமையான லுக்கில் இருந்தாலும், அவரது அழகு மற்றும் ஸ்மைல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட்களில் தனது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
Listen News!