• Dec 25 2024

நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்துவிட்டது- கையில் பலத்த காயத்துடன் இருக்கும் ரித்திகா சிங்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரித்திகா சிங். சினிமா துறையில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் கிக் பாக்ஸிங்கில் பல போட்டிகளில் விளையாடியுள்ளாராம் பின்னர் தான் ரித்திகாவுக்கு பட வாய்ப்பு தேடி வந்ததாம்.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள்  ரித்திகாவின் கதவை தட்டியது. விஜய் சேதுபதியுடன் இணைந்து 'ஆண்டவன் கட்டளை' , நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து 'சிவலிங்கா', அசோக் செல்வனுடன் 'ஓ மை கடவுளே' படத்திலும் நடித்துள்ளார்.


தமிழில் கலக்கிய ரித்திகா தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இறுதியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரித்திகா தற்போது மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். 

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் 170வது படத்தில்  முக்கிய ரோலில் நடிக்கிறார். அவர் தற்போது கையில் ரத்த காயங்கள் உடன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.'Werewolf உடன் சண்டை போட்டது போல இருக்கிறது' என குறிப்பிட்டு ரித்திகா அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை எச்சரித்து கொண்டே இருந்தார்கள். கண்ணாடி இருக்கிறது என சொன்னார்கள். ஆனால் இது எல்லாம் நடப்பது தான். சில நேரங்களில் momentum கண்ட்ரோல் செய்ய முடியாது தானே."நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்துவிட்டது" என ரித்திகா கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement