• Dec 25 2024

'எனக்கு இதுதான் ரொம்ப ஸ்பெஷல் இடம்..' கயல் சீரியல் நடிகையின் ஹோம் டூர்..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் சன் தொலைக்காட்சி, விஜய் டி.வி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்களுக்குப் போட்டியாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. ரியாலிட்டி நிகழ்ச்சிகள் விஷயத்தில் சற்றே சறுக்கினாலும், சீரியல் விஷயத்தில் தன்னை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை சன் டி.வி. அவ்வப்போது நிரூபித்து வருகிறதை நாம் பார்க்கின்றோம்.

அத்துடன், கயல் என்ற பெண், அப்பா இல்லாத தனது குடும்பத்தை காப்பாற்ற எப்படி போராடுகிறாள், அதனை அழிக்க அவரது பெரியப்பாவின் குடும்பத்தினரும், அவள் மீது கொண்ட ஆசையால் கயல் வேலை பார்க்கும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் என்னென்ன சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள் என்பதை அதிரடி திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புடன் ஒளிபரப்பி வருகின்றது.


மேலும், கயல் ரோலில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவரது அமைதியான காதலன் எழிலரசனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.

இந்த நிலையில், கயல் சீரியல் நடிகையின்  ஹோம் டூர் ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி, அவர் வீட்டில் தனக்கு மிகவும் பிடித்த இடம் இதுதான் என்று சில இடங்களை காட்டியுள்ளார். அதிலும் தனது ரசிகர் ஒருவர் தந்ததாக சாய்பாபா படத்தை பாசத்துடன் வைத்துள்ளார்.


கடந்த காலத்தில் இடம்பெற்ற கொரோனா தாக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், தானே வரைந்த அழகிய டூடில் ஆர்ட், தனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று என சைத்ரா ரெட்டி தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி, செடிகள், பூ மரங்கள் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் சைத்ரா, செல்ல பிராணிகளிடம் பேசுவது போல தினமும் தன் செடிகளுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement