• Dec 25 2024

தனுஷிற்கு திருமணத்திற்கு பின்பு அக்ஷயா வழங்கிய...முதல் பரிசு இது தான்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது, மற்றும் அது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.


அமெரிக்காவில் இருந்து நெப்போலியன் தனது மகன் தனுஷ் நேரடியாக பங்கேற்க இயலாத காரணத்தினால் கப்பல் மூலம் ஜப்பானுக்குப் பயணித்து திருமணத்தை மிகச்சிறப்பாக நடத்தினார். தனுஷ்-அக்ஷயா திருமண விழாவில் சரத்குமார், ராதிகா, குஷ்பு, மீனா, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


திருமணத்திற்குப் பிறகு, நெப்போலியன் மற்றும் அவரது மனைவி தனியாக பேட்டி அளித்ததைப் போலவே, புதிதாகத் திருமணம்செய்துகொண்ட தனுஷ் மற்றும் அக்ஷயா மனம் திறந்து பேட்டி கொடுத்தனர். குறித்த பேட்டியில் அக்ஷயா பேசும்போது, "நான் ஓவியக்கலை மிக விரும்புகிறேன். தனுஷின் உருவத்தை ஓவியமாக வரைந்து முதல் பரிசாக கொடுத்தது என் வாழ்க்கையின் ஒரு அழகான தருணம் மற்றும் நான் தனுஷிற்கு வழங்கிய முதல் கிப்ட்" என்று கூறி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

Advertisement

Advertisement