• Jun 11 2026

இது வேற லெவல் ஆக்க்ஷன்! - 5 மொழிகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வைரல்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நாயகியாக கயாடு லோகர் நடித்துள்ள நிலையில், இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொண்டுள்ளார். டீசரில் இடம்பெற்றுள்ள பின்னணி இசையும், அதிரடி காட்சிகளும் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, டொவினோ தாமஸின் மாஸ் லுக் மற்றும் ஆக்க்ஷன் சீன்கள் அதிக கவனம் ஈர்த்துள்ளன.


மேலும், இந்த படத்தில் பாபுராஜ், விஜயராகவன் உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி மற்றும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகி இருப்பதாக டீசர் மூலம் தெளிவாக தெரிகிறது. வேகமான காட்சிகள், சண்டை சீன்கள், மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் ஆகியவை இந்த படத்தை ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாக்கியுள்ளன.

இத்திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான்-இந்தியா ரிலீஸாக வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால், இந்த படம் பல மொழி ரசிகர்களையும் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement