• Apr 19 2026

காதல்னா இதுதான்..! 'தேரே இஷ்க் மெய்ன்' பட விழாவில் மனம் திறந்து பேசிய தனுஷ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பன்முக திறமையுடன் வலம் வருகின்றார்.  இவருடைய நடிப்பில் இறுதியாக இட்லி கடை படம் வெளியானது.

இதைத்தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மெய்ன்'  என்ற இந்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ் காதல் தொடர்பில் தெரிவித்த விடயங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ளார்.  மேலும் இதில் கீர்த்தி சனோன் முக்தி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இதற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இந்தி, தமிழில் வெளியாகவுளள்து.


இந்த நிலையில், 'தேரே இஷ்க் மெய்ன்'  படத்தின் ட்ரெய்லர்  வெளியீட்டு விழாவில் தனுஷிடம் காதல் பற்றி கேட்டபோது, அவர் 'நத்திங்' என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு அவர் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று கூறி பலரையும்  அசர வைத்துள்ளார்.

மேலும்,  'தான் காதலை முழுமையாக நம்புவதாகவும், காதலுக்கு பல வரையறைகள் இருக்கும், ஆனால் ஒருவருக்காக மாற வேண்டிய அவசியம் இல்லாமல் தனக்கே சொந்தமானவராக இருக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.  தனுஷ் இப்படி தெரிவித்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement