• Jan 14 2025

இது என்னோட கடைசி நாள்! கோட் படத்தை பற்றி உருக்கமாக பேசிய நடிகர் அஜ்மல் அமீர்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டாலும் அவர் அரசியலில் இறங்கிய பின்பு வரும் முதல் படமாக இருக்கும் கோட் படத்திற்கு தமிழ் நாடே காத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் சமீபத்தில் நடிக்கும் திரைப்படம் கோட் ஆகும். இந்த திரைப்படத்தில் பிரபு தேவா , பிரசாந்த் ஆகிய முன்னணி நடிகர்கள் நடிப்பதோடு இவர்களுடன் நடிகர் அஜ்மல் அமீரும் நடிக்கின்றார்.இன்றுடன் கோட் படத்தில் இவரது படப்பிடிப்புகள் முடிவடைகின்றது.


அவர் கூறுகையில் "இன்று எனது படப்பிடிப்பின் கடைசி நாள் , இது ஒரு அற்புதமான பயணம். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஒருவர் விடைபெறுகையில், நான் ஒரு புதிய பாத்திரத்தில் மூழ்கி, எனது வரவிருக்கும் திரைப்படத்தில் மற்றொரு கதையை உயிர்ப்பிக்க உற்சாகமாக இருக்கிறேன். அடுத்தது என்ன என்று காத்திருங்கள்" இவ்வாறு அஜ்மல் அமீர் கூறியுள்ளார்.


 

Advertisement

Advertisement