• Jun 26 2025

புதிய கதையமைப்பின் அழகு இதுதான்! –"DNA" படத்தைப் பாராட்டிய பிரபல நடிகர்..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளுக்கும், உணர்வூட்டும் மெசேஜ்களுக்கும் இடம் கொடுத்து வந்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், தற்போது “DNA” எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார்.


இப்படம் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், நடிகர் சசிகுமார் நேரடியாக இப்படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இந்தப் படம், தற்காலிக சமூக சூழலில் நடக்கும் குடும்பப் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாகவும்  எதார்த்தமாகவும் காட்சிப்படுத்துகிறது. நடிப்பில் அதர்வா மற்றும் நிமிஷா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.


இதுகுறித்து நடிகர் சசிகுமார், "DNA திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய கதைகளத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காட்டியுள்ளார். அதர்வா, நிமிஷாவின் நடிப்பு அசத்தலாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!" எனது தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement