• Sep 17 2026

ரஜினியை சீண்டுறவங்களுக்கு இதுதான் பதிலடி.. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அதிரடிக் கருத்து

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை விமர்சிக்கும் விதம் குறித்தும், ரஜினிகாந்தின் புகழ் குறித்தும் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், சமூக வலைத்தளங்களில் சிலர் வன்மத்தோடு தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் கூட, அதற்கு கீழே பல மோசமான கமெண்ட்டுகள் பதிவிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற எதிர்மறையான கருத்துகளால் ரஜினிகாந்தின் புகழோ, அந்தஸ்தோ எந்த வகையிலும் குறைந்துவிடாது என்றும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


மேலும், “சூரியன் எப்போதுமே சூரியன் தான்” என்று ரஜினிகாந்தின் பெருமையை குறிப்பிட்ட அவர், நெகட்டிவ் கமெண்ட்டுகளை பதிவிடுவது ஒருவகையான சாடிசம் எனவும் விமர்சித்துள்ளார். அதுபோன்ற கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கே தோல்வியாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இந்த கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக ரஜினிகாந்தை விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்துள்ள இந்த பதில் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement