• Jan 11 2025

ரவீந்தர் எதுக்கு உள்ள போனீங்க? 2 பேருக்கும் இது லாஸ்ட் வார்னிக்! விஜய் சேதுபதி அதிரடி

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 தற்போது சுவாரஷ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி ஒளிபரப்பாகிவரும் இந்த சீசனில் ஆட்டத்தை குழப்புவது போல பிக்பாஸ் செய்த தரமான சம்பவம் போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


பிக்பாஸ் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பி விளையாட்டுக்கு சுவாரஷ்யத்தை கொடுத்துள்ளார். ரிப்ளேஸ்மென்ட் டாஸ்க்குக்காக போட்டியாளர்கள் இந்த வாரம் தீவிரமாக விளையாடிய நிலையில் வார இறுதியில் யார் எலிமினேஷன் ஆக போகிறார், யார் ரிப்ளேஸ்மென்டாக வர போகிறார் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 


இந்நிலையில் விஜய் சேதுபதி " உள்ளே வந்த போட்டியாளர்களின் யார் வன்மத்தை கக்கியது என்று கேட்கிறார்.  அதில் நிறைய போட்டியாளர்கள் அர்னவ் மற்றும் தர்ஷாவை சொல்கிறார்கள். மேலும் ரவிந்தரிடம் நீங்க டாப் 5ல வரணும்னு பார்த்தீங்களா?  இல்லை உங்களுக்கு பிடிச்ச போட்டியாளருக்கு சப்போட் பண்ணனும்னு போனீங்களா" என்று கேட்கிறார். 


மேலும் "இன்றைக்கு கண்டிப்பா எலிமினேஷன் இருக்கு என்று சொல்கிறார். இதனை கேட்டு போட்டியாளர்கள் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள். மீண்டும் விஜய் சேதுபதி எதுக்கு இவ்வளோ ஷாக் ஆகணும். பண பெட்டியை எடுத்துட்டு போகலானாலும் எலிமினேஷன் இருக்கு" என்று சொல்கிறார். அத்தோடு ஜாக்குலின்- சவுந்தர்யா பிரன்ஷிப் சண்டை குறித்து பேசிய விஜய் சேதுபதி "தர்ஷா மற்றும் ஜாக்குலின் அண்ட் உள்ள போன எல்லாருக்கும் சேர்த்து சொல்லுறேன் இது ஒரு நல்ல பிஹேவியர் இல்லை" என்றும் கூறுகிறார்.

Advertisement

Advertisement