• Dec 26 2024

போண்டாமணியின் இறப்புக்கு இது தான் முக்கிய காரணம்- ரொம்ப கொடுமையான விஷயமாக இருக்கே...

stella / 1 year ago

Advertisement

Listen News!


நகைச்சுவை நடிகர் போண்டா மணி  கடந்த ஆண்டு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட போண்டா மணி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார்.ரஜினிகாந்த், தனுஷ், விஜய்சேதுபதி, மயில்சாமி உள்ளிட்ட பலர் அவருக்கு பணம் கொடுத்து உதவினார்கள்.

இருப்பினும் இவர் முந்த நாள் இரவு,உயிரிழந்தார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.


நடிகர் போண்டா மணியின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இந்த நிலையில் போண்டாமணியின் மறைவுக்கு முக்கியமான காரணமே இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் தனது வேதனை தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, என் அருமை நண்பர் போண்டா மணி இன்று நம்மோடு இல்லை. என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்களில் போண்டா மணியும் ஒருவர். இலங்கை அகதியாக வந்த போண்டா மணிக்கு இப்போது வரைக்கும் பாஸ்போர்ட் இல்லை.

எந்தவிதமான கெட்டப்பழக்கமும் இல்லாத போண்டா மணிக்கு கடந்த ஆண்டு இரண்டு கிட்னியும் செயல் இழந்துவிட்டது. இதனால், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்துக்கொண்டு இருந்தார். இதில் கொடுமையான விஷயம் என்ன வென்றால், இரண்டு முறை கிட்னி கிடைத்த போதும், அது மேட்ச் ஆகாததால், அறுவை சிகிச்சை நடைபெறாமல் போனது. 


இதனால், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்து வரும் இவருக்கு நேற்று காலை டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது. இதுகுறித்து அவரது மகன் அப்பா இன்று மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், காசு இல்லாததால், டயாலிசிஸ் செய்யவில்லை. நாளைக்கு போகலாம் என்று சொல்லிய நிலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து,அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.பல நேரங்களில் கடவுள் அவரை காப்பாற்றிய நிலையில்,  அவரின் விதி முடிந்து விட்டது என்று கண் கலங்கினார்.


Advertisement

Advertisement