• May 23 2026

பிரிந்த பின்னரும் இப்படி ஒரு ஒப்பந்தமா.? ஜி.வி குறித்து சைந்தவி உடைத்த உண்மை.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கும் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பிரபல பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பல வருடங்கள் காதலித்து பின்னர் திருமண வாழ்வில் இணைந்த இந்தத் தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிவை அறிவித்திருந்தாலும், அவர்கள் குடும்ப உறவை முற்றிலும் துண்டிக்காமல், மகளின் நலனுக்காக நட்பான உறவையே தொடர்ந்து பேணி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


சமீபத்தில் சைந்தவி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதில் அவர், தனது மகள் இரு வீட்டிலும் சமமாக நேரத்தை செலவிடுவதாகவும், தந்தை வீட்டுக்கும் தாய் வீட்டுக்கும் மாறி மாறி செல்வதாகவும் கூறியுள்ளார். குழந்தையின் அன்றாட செயல்கள் குறித்து இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து தகவல் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மகள் தந்தை வீட்டுக்கு செல்லும் முன் அவர் என்ன செய்கிறார் என்பதை தந்தையிடம் கூறுவதாகவும், அதேபோல் தந்தையும் அங்கு நடந்த விஷயங்களை தாயிடம் பகிர்வதாகவும் சைந்தவி விளக்கியுள்ளார்.

இதனால் மகளுக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படாமல், ஆரோக்கியமான சூழலில் வளர்க்க முடிகிறது என அவர் கூறியுள்ளார். பெற்றோர் பிரிந்திருந்தாலும், குழந்தையின் மனநலன் பாதிக்கப்படாத வகையில் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், “பிரிந்தாலும் குழந்தைக்காக இப்படி புரிதலுடன் நடப்பது உண்மையிலேயே சிறந்த எடுத்துக்காட்டு” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement