• Dec 26 2024

பப்லு ,ஷீத்தல் பிரிவுக்கு இது தான் காரணம்?- இது தேவைப்பட்டால் என்ன பண்றது- உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான பப்லு பிருத்விராஜ், ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார். ஹீரோவாக இருந்த அவர், தற்போது குணச்சித்திர நடிகராக மாறியுள்ளார்.57 வயதை கடந்துவிட்டபோதும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் ரசிகர்கள் கவர்ந்தவர்.

தற்பொழுது சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு இவர்  30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணுடன் லிவிங் லைப்பில் வாழ்ந்து வந்தார். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.


இந்த விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. தொடர்ந்து அவருடன் இணைந்து சமூக வலைதளங்களில் அதிகமான வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் பப்லு.இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக இருவரும் தனித்தனியாக அறிவித்துள்ளனர்.இவர்களின் பிரிவுக்கான காரணத்தை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரின் பிரிவு குறித்து நடிகர் பயில்வான் யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் தற்போது சந்தோஷமாக பிரிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 


திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பைண்டிங் இல்லாமல் இருவரும் இருந்ததுதான் இவர்களின் பிரிவுக்கும் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு கலாச்சாரமான இந்த லிவிங் டுகெதர் வாழ்க்கை தற்போது தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement