தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் இட்லி கடை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தனுஷ் மற்றும் நித்தியாமேனன் இணைந்து நடிக்கும் இப் படத்தினை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.
முதல் கட்ட படப்புடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்பொழுது அடுத்த கட்ட சூட்டிங்கினை மீண்டும் தாய்லாந்தில் எடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.இந்நிலையில் ஒரு சில காரணங்களினால் இப் படப்புடிப்புகள் தாமதமாகியுள்ளதாம் அதாவது இப் படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அருண் விஜய் ,ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், P. சமுத்திரக்கனி, ராஜ்கிரண் போன்ற பல பிஸியான நடிகர்கள் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய தேவை இருப்பதனால் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒன்று திரட்ட முடியாமையினால் சூட்டிங் வேலைகள் தள்ளிப்போவதாக சினிமா வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Listen News!