• Dec 25 2024

பாக்கியலட்சுமி சீரியல் விட்டு வெளியேற இதுதான் காரணம்! உண்மையை உடைத்த நடிகை ரித்திகா!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதில் எளிமையான தோற்றத்தில் எந்த ஒரு பந்தாவான லுக்கும் இல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தவர் தான் ரித்திகா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பல ரசிகர்களை கவர்ந்தார்.


பாக்கியலட்சுமி சீரியல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தாண்டி சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பாட்டு பாடி, காமெடி செய்தும் அசத்தினார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் பின்பு பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகியவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அதேநேரத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். 


அண்மையில் ஒரு பேட்டியில் ரித்திகா பேசும்போது, திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க வேண்டும் என்று தான் இருந்தேன், யாரும் என்னை தடுக்கவில்லை. ஆனால் எனக்கு உடல் நிலையில் சில பிரச்சனைகள் வந்தது, அதனால் தான் நான் நடிப்பை விட்டு விலகி இருந்தேன். குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிக்க தொடங்குவேன் என கூறியுள்ளார். ஆகவே மீண்டும் அவரை திரையில் எதிர் பார்க்கலாம். 



  

Advertisement

Advertisement