• Feb 28 2025

NEEK பட புரொமோஷன்களில் இருந்து விலகி நிற்கும் தனுஷ்..! காரணம் இது தான்...

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர்,மேத்யூ தாமஸ்,வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் போன்ற இளம் அறிமுக நாயகர்கள் நடிப்பில் காதலர் தின வெளியீடாக 21 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகின்றது.


இதை விட இப் படத்தின் கதாநாயகர்கள் பரபரப்பாக பல ஊடகங்களிற்கு பேட்டி அளித்து வருகின்றனர். மற்றும் இப் படத்திற்கு ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளதுடன் இவரது இசையில் வெளியாகியுள்ள பாடல்கள் மிகவும் ரசிக்க வைத்துள்ளது.


இந்த நிலையில் neek படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. பல நேர்காணல்கள் ,பேட்டிகள் என அனைத்தும் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றது. ஆனால் இந்த எந்த நிகழ்விலும் நடிகர் தனுஷ் கலந்து கொள்ளாமையினால் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தற்போது இதற்கான காரணம் ஒன்று தனுஷ் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் ப்ரோமோஷன் நிகழ்வுகளிற்கு செல்லாமைக்கான காரணம் இது இந்த இளம் சமுதாயத்திற்கான படம் ஆகவே அவர்கள் தான் இந்த படத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகமாக வேண்டும் இதில் இடையில் நான் கலந்து கொண்டு அவர்களை முடக்க கூடாது என மிகவும் பெரிய மனதுடன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement