• Apr 04 2025

தமிழ் சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் இது தான்..! நடிகை பாவனா பதில்...

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் தமிழ் ,தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து அசத்திய நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை ,வெயில் ,தீபாவளி ,கூடல் நகர் ,ஆர்யா ,ஜெயம் கொண்டான் ,அசல் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது "the door " எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுக்கவுள்ளார்.


15 வருடத்தின் பின் தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் இவர் தற்போது பல நேர்காணல்களில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் இத்தனை வருடங்களாக படம் நடிக்காமைக்கான காரணத்தை கூறியுள்ளார்.


அதாவது இவருக்கு ஒரு சில தமிழ் படங்கள் கமிட்டாகி வந்துள்ளதாகவும் படக்குழுவிற்கும் இவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் சரியாக அமையாமையினால் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கை நழுவியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தனது தமிழ் சினிமா நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். இவர் இந்த படத்தில் 15 ஆண்டுகளின் பின் என்ட்ரி கொடுப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement