சுந்தர்சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகின்றார். ஆரம்பத்தில் பல பிரச்சினைகளை படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா செய்திருந்தாலும் தற்போது படப்பிடிப்பு மிகவும் சுலபமாக இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
rj பாலாஜி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியாகிய மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை பாலாஜி அனுமதியுடன் சுந்தர்சி இயக்கி வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் இரண்டு காலகட்டத்தில் இருப்பது போன்று படம் எடுக்கப்படவுள்ளது. அதாவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு கதை அதன் பின்னர் இன்னொரு கதை என படத்தினை நகர்த்துவதற்கு இயக்குநர் தீர்மானித்துள்ளார்.
இந்த நிலையில் படத்தில் தற்போதைய காலகட்ட கதையில் நயன்தாரா பொலிஸ் கெட்டப்பில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் நயன்தாரா முன்பு நடித்த படங்களில் பொலிஸ் அதிகாரியாக நடித்து இருந்தாலும் காக்கி சட்டை போட மறுத்துள்ளார். அதே போல் இந்த படத்திலும் அவர் வேண்டாம் என்று கூறியதாகவும் பின்னர் இயக்குநர் கட்டாயமாக செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னர் நயன்தாரா ok சொல்லி இருப்பதாக தெரியவந்துள்ளது.
Listen News!