• Dec 26 2024

ரஜினியின் 170வது படத்திற்கு இதுதான் டைட்டில்! வெளியான புது அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பல வருடங்களுக்குப் பின்னர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.

லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ன கதாப்பாத்திரத்தில நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள லால் சலாம், விளையாட்டில் மத அரசியல் இருப்பது குறித்து பேசியுள்ளதை இந்த டீசர் உறுதி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 படங்களில் இருந்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதனபடி, ரஜினியின் 170வது படத்திற்கு 'வேட்டையன்' என டைட்டில் கன்பார்ம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இதுதான் டைட்டில் என  அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. 


இதனிடையே ரஜினியின் 171வது படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினியும் லோகேஷ் கனகராஜ்ஜும்  இணையும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

எனினும், ரஜினியின் 171வது படம் தொடர்பில் அபிஸியல் அப்டேட் எதுவும்  வெளியாகிவிட்டாலும், ரஜினியின் பிறந்தநாளில் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement