• Apr 04 2025

விஜய் சேதுபதியின் அடுத்த பட தலைப்பு இது தான்..!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய விஜய் சேதுபதி தற்போது படங்களில் நடித்து வருகின்றார். தனது அழகிய நடிப்பினால் மக்கள் செல்வன் எனும் பட்ட பெயரினை பெற்று கொண்ட இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்போஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து சிறந்த தீர்ப்புகளை வழங்கியிருந்தார். ஆரம்பங்களில் ஒரு சில விமர்சனங்கள் எழுந்தாலும் இறுதியில் மக்கள் இவரை கொண்டாடினர்.


தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். படத்திற்கான சூட்டிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் இவரின் பெயரை வீர என வைத்துள்ளனர்.


இதற்கிடையில் படத்தின் பெயரை "ஆகாச வீரன் " என வைக்க இயக்குநர் தீர்மானித்துள்ளார். மேலும் இப் படத்தினை சத்திய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ளதுடன் படம் அமேசான் தளத்தில் 22 கோடி விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மே அல்லது ஜூன் மாதமளவில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement