• Apr 18 2026

தளபதி விஜய் அரசியல் வருகை... நடிகர் அர்ஜுன்தாஸ் கூறியது இதுதான்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

கோவையில் நடைபெற்ற 'போர்' திரைப்பட குழுவின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அர்ஜுன்தாஸ் இவ்வாறு கூறியுள்ளார். 


கோவையில் நடைபெற்ற 'போர்' திரைப்பட குழுவின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஊடகவியலாளர் ஒருவர் விஜய் சார் அவர்களின் அரசியல் வருகை குறித்து என்ன சொல்ல விரும்புறீங்க? என்று கேட்க அதற்கு அர்ஜூன் தாஸ் "நான் அவருக்கு கால் பண்ணி விஸ் பண்ணுனேன். அவர் அரசியல் வாரத்துக்கு நிறைய யோசிச்சி இருப்பாரு அதன் படித்தான் வந்து இருக்காரு சந்தோசமான விடயம் தான்".


"என்னோட வோட்டு அவருக்கா இருக்கும்னு கேட்டா சொல்ல முடியாது ஆனா அவரை எனக்கும் புடிக்கும், அவரு படம் நடிக்க மாட்டேன்னு சொன்னதுதான் கவலை. ரசிகர்களின் எதிர் பார்ப்பும் அவர் மறுபடி படம் நடிக்கணும் என்பதுதான். ஒரு ரசிகனா எனக்கும் அப்டித்தான்" என்று கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement