• Dec 25 2024

இந்த கால வச்சிட்டா விஜய் பார்க்க போறனு கேட்டாங்க... கிண்டல் செய்தாங்க... என் கைய்ய புடிச்சி உக்கார வச்சாரு அப்பவே நான் அவுட்... விஜய் ரசிகரின் நெகிழ்ச்சியான பதிவு... வைரல் புகைப்படம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் அவர்கள் எப்போதுமே தனது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பிரபலம். விஜய்யை சந்தித்த ரசிகர்கள் பலர் உள்ளார்கள். அப்படி ஒரு ரசிகர் விஜய்யை நேரில் பார்த்த அனுபவத்தை பேட்டி கொடுத்துள்ளார்.


நடிகர் விஜய் அவர்களுடன் நீங்கள் எடுத்து கொண்ட புகைப்படம் தான் கடந்த சில வாரங்களாகவே வைரல் அடைந்து வருகிறது.  அது தொடர்பாக சொல்லுங்க என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு விஜய் ரசிகர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

சிறு வயதில் இருந்தே நான் விஜய் ரசிகர். எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்தது. எனக்கு தெரிந்த ஒருவரிடம் லியோ திரைப்பட ஷூட்டிங் ஸ்டார்ட்டில் இருந்தே கேட்டு கொண்டு இருந்தேன். விஜய் அண்ணா அவர்களிடம் சொல்லி அவர் என்னை வர சொல்லி இருந்தார். 


நான் நடந்து வருவதை பார்த்து அவரே என்னிடம் வந்தாரு, என் கைய்ய புடிச்சி உக்கார வச்சாரு அப்பவே நான் அவுட் , எண்ணப்பத்தி விசாரிச்சாறு, அவ்வளோ சந்தோசமா இருந்தது. நான் விஜய் சார் பாத்தன்னு சொன்னா யாரும் நம்பவில்லை, இந்த காலவச்சிட்டு அங்க போனியா என்று கேட்டாங்க, என்ன கிண்டல் தான் செய்தாங்க. ஆனால் நான் கவலை படவில்லை அண்ணாவை பார்த்த சந்தோசம் போதும் இந்த படம் வெளிவரும் வரைக்கும் நான் யார் என்று தெரியாது. இப்போது நான் வைரல் ஆனதுக்கு விஜய் அண்ணாவும் காரணம் என மனம் மகிழ்ந்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்... 



Advertisement

Advertisement