• Dec 26 2024

நடிகர் கார்த்தி தன்னுடைய உடல் எடையை எப்படிக் குறைத்தார் தெரியுமா?- சூப்பர் டிப்ஸ்ஸாக இருக்கே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியவர் தான் கார்த்தி. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.இப்போது தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவரது நடிப்பில் இறதியாக வெளியாகிய திரைப்படம் தான் ஜப்பான்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி பேசும்போது, பையா படத்திற்கு பிறகு என்னையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை உணர்ந்தேன்.


இதனால் உடல் எடையை குறைக்க அதிகம் ஓட ஆரம்பித்தேன், ஆனால் பிரச்சனை என்னவென்றால் எனக்கு அவ்வளவு எளிதில் உடல் எடை குறையாது.அந்த சமயத்திலெல்லாம் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகுவேன். ஒரு நடிகனாக நான் மாற வேண்டும் என்று நினைத்த பொழுது கூட, நான் மிகவும் வலிமையான மனிதனாக மாற வேண்டும் என்று தான் நினைத்தேன்.

உணவு பழக்கங்களை மாற்றினேன், 70% நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்து தான் செயல்படுகிறது, மீதி 30 தான் உடற்பயிற்சி என பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement