• Dec 26 2024

எனக்கு கெட்டது செய்தவர்கள் நல்லா இருங்க.... தினேஷை மறைமுகமாக தாக்கிய ரச்சிதா பதிவு...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் நடிகர் தினேஷை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

ரச்சிதா பிக் பாஸ் 6ம் சீசனில் கலந்துகொண்டபோது தினேஷ் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை, ஆனால் 7ம் சீசனில் தினேஷ் கலந்துகொண்டபோது மனைவியை பிரிந்து இருப்பது பற்றி பல முறை பேசினார். வெளியில் இருந்த ரச்சிதா தினேஷ் பற்றி மறைமுகமாக இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். மேலும் அவருடன் மீண்டும் சேர வாய்பில்லை என அவர் உறுதியாக கூறினார்.


இந்நிலையில் ரச்சிதா தினேஷை தாக்கி பதிவிட்டு இருக்கிறார். "எனக்கு கெட்டது செய்தவர்கள், எனது பதிவு எல்லாமே அவர்களைபற்றியது தான் என நினைப்பார்கள். நல்லா இருங்க" என ரச்சிதா பதிவிட்டு இருக்கிறார். இந்த விடையம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  


Advertisement

Advertisement