• Dec 26 2024

தேசிய விருதை தட்டிதூக்கிய திருச்சிற்றம்பலம்... "மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே"...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'  திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் தனுஷின் பிசினஸில் பெஸ்ட் என்று கூறுகிறது. 'திருச்சிற்றம்பலம்' உலகம் முழுவதும் ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, அதே நேரத்தில் இப்படம் தமிழகத்தில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.


நீண்ட நாள் நண்பர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதே இப் படத்தின் கதை. தனுஷ் மற்றும் நித்யா மேனன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், மேலும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. 


இந்த திரைப்படத்தில் உள்ள தாய் கிழவி பாடல், மேகம் கருக்காதா பாடல் என இந்த திரைப்படத்தில் உள்ள அணைத்து பாடல்களுமே வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது  திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காத பாடலுக்கு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.   

Advertisement

Advertisement