• Dec 26 2024

தமிழ் சினிமாவின் ஆல் டைம் சாக்லட் போய்,பிறந்த நாள் இன்று.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினத்தினால் அறிமுகப்படுத்தபட்ட முக்கிய ரத்தினங்களில் ஒருவராவார் நடிகர் மற்றும் இயக்குனர் அரவிந்த் சுவாமி.1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான தளபதியில் முக்கிய வேடத்தில் தோன்றி முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் அரவிந்த் சுவாமி.

தனி ஒருவனை அடுத்து 15 படங்களில் நடிக்க மறுத்த அரவிந்த்சாமி: ஏன் தெரியுமா? |  Arvind Swami says No to 15 movies - Tamil Filmibeat

அதன்பின் அவர் நடித்த ரோஜா ,பம்பாய் , மின்சரா கனவு படங்களின் மூலமாக பெண்களின் கனவு நாயகனாகவே மாறினார் நடிகர் அரவிந்த் சுவாமி. அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்த இவர் தமிழ் தாண்டி அனைத்து இந்திய மொழி படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார்.

நடித்தது 30 படம்... ஆனால் சொத்து மட்டும் 3300 கோடியா? நடிகர்  அரவிந்த்சாமியின் மறுப்பக்கம்!

சிறிது காலம் திரையுலகில் இருந்து விலகி சாப்ட் வார் கம்பெனி நடத்தி வந்த இவர் ஜெயம் ரவியின்  தனி ஒருவன் படத்தின் மூலமாக அனைவரலாலும் விரும்பப்படும் வில்லனாக அவதாரம் எடுத்தார்.இன்று தனது 54 வது பிறந்த தினத்தை கொண்டாடும் அரவிந்த் சுவாமிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்.இவரது Talent Maximus கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு 3300 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement