• Dec 26 2024

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள்! வாழ்த்து கூறிய முக்கிய பிரபலங்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் நடிப்பில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இன்று அவரது பிறந்தநாள் முன்னிட்டு அவரது கணவர் விக்னேஷ் சிவன் உட்பட பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


நயன்தாராவின் ஆவண படம் வெளியிடுவதற்கு தனுஷ் இடையூறு செய்ததாக நயன் குற்றம் சாட்டி இருந்தார். இதனால் கடந்த 2 நாளாக இந்த பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. நெட்டிசன்களும் இது குறித்து பேசி வருகிறார்கள். 


இன்று நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. அதனை பகிர்ந்த விக்னேஷ் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர். உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பை விட கோடி மடங்கு அதிகம் நீங்கள் யார் என் தங்கம் என்று பகிர்ந்துள்ளார். அத்தோடு இன்று நயன்தாராவின் புதிய திரைப்படமான ராக்காயி திரைப்படத்தின் டீசர் வெளியானது. மேலும் அவருக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 



Advertisement

Advertisement