• Oct 26 2024

சுமார் 8 ஆண்டுகள் கழித்து திரைக்கு வரவுள்ள மோனா 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

2016 ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான மோனா  திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை  பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இந்த காரணத்தினால் மோனா படத்திற்கு உலக அளவில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில், சுமார் 8 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாவது பாகம் 2 இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு இந்த பாகத்திற்கான ட்ரைலர் பட குழுவினர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.


டேவ் டெரிக் ஜூனியர், அபிகாயில் பார்லோ மற்றும் எமிலி பியர், ஓபெடாயா ஃபோய் மற்றும் மார்க் மான்சினா ஆகியோரின் இசையுடன் இப்படம் மியூசிக்கல் படமாக வெளியாக உள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமான மோனா 2 இந்த ஆண்டு நவம்பர் 27ம் திகதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



Advertisement