சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்து வந்துள்ளன. இவரது புகழ்பெற்ற “என் வழி தனி வழி” டயலாக், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு அழகான வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில் அந்த டயலாக்கை ஒரு குழந்தை ரஜினி முன்னிலையில் சொல்வது காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், ரசிகர்கள் அதனை பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர். வீடியோவில், ரஜினியின் மடியில் இருந்து அந்தக் குழந்தை “என் வழி தனி வழி” என்ற டயலாக்கை தெளிவாக சொல்லி உள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த பல ரசிகர்கள் " குழந்தை செம கியூட்டா பேசுது.." என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Listen News!