• Dec 26 2024

அம்மணமாக திரிஞ்ச மனோஜ்.. முத்து கொடுத்த சர்ப்ரைஸ்! பல்பு வாங்கிய ரோகிணி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் கிப்ட் கொடுத்ததை தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களுடைய கிப்டை பாட்டிக்கு கொடுக்கின்றார்கள்.

அதன்படி ரவி தன்னுடைய கிப்ட் கேக் தான் என சொல்ல, ஸ்ருதி போனை கொடுக்கின்றார். அதற்கு பின் விஜயா பார்வதியை கூட்டி வந்து டிவியை கொடுக்கின்றார்.

அதன் பின் மனோஜ் எல்லோரும் கிப்ட் கொடுத்துட்டோம் உங்க கிப்ட் யாருக்கு என்று கேட்க, கொஞ்சம் பொறுங்க என்ட பேரன் முத்து வரட்டும் என்று சொல்கிறார் பாட்டி. அதற்கு அவன்  காலையில் தான் வருவான் என்று மனோஜ் நக்கலாக சொல்லிக் கொண்டிருக்க, மாஸ் என்ட்ரி கொடுக்கின்றார் முத்து.

உள்ளே வந்த முத்துவிடம் எங்க போன என்று பாட்டி கேட்க, கண்டிப்பா கிப்ட் வாங்கி வந்து இருக்க மாட்டான் என்று மனோஜ் சொல்லுகிறார். அதற்கு முத்து நான் எதுவும் வாங்கிட்டு வரல என்று சொன்னதும் நான் சொன்ன மாதிரி நடந்துருச்சு என்று சந்தோஷப்படுகிறார் மனோஜ்.

ஆனால் நான் வாங்கிட்டு வரல கூட்டிட்டு வந்து இருக்கேன் என்று நாச்சியார் பாட்டியின் சிறுவயது தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்து சப்ரைஸ் கொடுக்கின்றார் முத்து.


முப்பது வருஷத்துக்கு பிறகு தனது தோழிகளை பார்த்த சந்தோஷத்தில் கண்கலங்கி சந்தோஷப்பட்டு அவருடன் பேசி சிரிக்கிறார் பாட்டி. மேலும் பாட்டி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி மனோஜை கூப்பிட்டு அறிமுகம் செய்யும் போது, இவன் தானே அம்மணமாக திரிஞ்சான் என சொல்லி சிரிக்கிறார்கள். அதன்பின், மனோஜ் ரோகிணியும் கண்டிப்பா ஸ்பெஷல் கிப்ட் அவங்களுக்கு கிடைக்காது. ஏன்னா மீனா எதுவுமே செய்யல என்று சொல்லுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து மீனா முத்துவிடம் நானும் பாட்டிக்காக ஒன்று வச்சிருக்கேன் என்று வீடியோவை எடுத்து எல்லோருக்கும் போட்டுக்காட்ட,  தனது என்பது வருட வாழ்க்கை பயண அனுபவத்தை சொல்லுகிறார் பாட்டி. மீனாவின் இந்த செயலால் ரோகிணி பல்பு வாங்குகின்றார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement