• Apr 07 2026

காதலுக்கு இன்சூரன்ஸா? வைரலாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘பூக்கட்டும்’ பாடல்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK). இந்தப் படத்தில் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். இளம் தலைமுறையை கவரும் வகையில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த கதையம்சத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.


இப்படம் 2026 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘பூக்கட்டும்’ என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த பாடல் மென்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிமையான மெலடியாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளும், இசையும் இணைந்து இளைஞர்களின் மனதை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ரித்தி ஷெட்டியின் திரை chemistry இந்த பாடலில் மிகவும் அழகாக வெளிப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும், யூடியூபிலும் இந்தப் பாடல் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பாடலின் மெலடி மற்றும் காட்சிகளை பாராட்டி வருகின்றனர்.

படம் வெளியாகும் முன்பே இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், ‘பூக்கட்டும்’ பாடல் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கவைத்துள்ளது. 

Advertisement

Advertisement